போதை பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகை சஞ்சனா கல்ராணி - போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் உறுதி
பதிவு : செப்டம்பர் 08, 2020, 06:31 PM
கன்னட திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில் ராகினி திவேதியை தொடர்ந்து சஞ்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. தமிழில் 2006ல் ஒரு காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னட பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை. 

தெலுங்கில் பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்திருக்கும் சஞ்சனா, மலையாள படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங்கில் அறிமுகமாகினார்.. ஏராளமான டிவி விளம்பரங்களில் நடித்துள்ள சஞ்சனா, கடந்த 2005ல் தெலுங்கில் 'சொக்கடு' என்ற படம் திரையுலகிற்கு அறிமுகமானார். 

பின்னர் கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சஞ்சனா. இவரது சகோதரி நிக்கி கல்ராணியை போலவே இவரும் நடிகையாக அடுத்தடுத்து படங்களில் நடித்து அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமாக உயர்ந்தார்.  இந்த சூழலில் தான் போதைப் பொருள் விவகாரம் கிளம்பியது. 

சஞ்சனாவின் நண்பரான ராகுல், போதை பொருய் வழக்கில் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கன்னட திரையுலகை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருள்கள் விநியோகம் செய்யும் இவர், கேசினோ எனப்படும் சூதாட்ட கிளப் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இதில் சினிமா விஐபிகள் பலரும் ரெகுலர் வாடிக்கையாளர்களாம்.

சஞ்சனாவின் ஆண் நண்பரான ராகுல், கைதானதை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் சஞ்சனாவின் பெயரும் அடிபட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் ராகினி திவேதி 2 வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நிலையில் சஞ்சனாவின் பெயரும் ஆரம்பத்தில் இருந்தே அடிபட்டது. 

அதேநேரம் பிரசாந்த் சம்பர்கி என்பவர் சஞ்சனா குறித்து பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர் தன் தரப்பு விளக்கத்தையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். 

அதில், தனக்கும் இந்த போதைப் பொருள் கும்பலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இதில் இருந்து வெளியே வருவேன் என்றும் கூறியுள்ளார். கன்னட திரை உலகம் தனக்கு கோயில் போன்றது என்றும், இந்த விவகாரத்தில் திரைத்துறையினரை இழுப்பது தேவையில்லாத ஒன்று என்றும் கூறியிருக்கிறார் சஞ்சனா... 

இதையடுத்து சஞ்சனாவின் வீட்டில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரின் 3 செல்போன்களை பறிமுதல் செய்து அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கன்னட திரை உலகில் அடுத்தடுத்த பிரபலங்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்குவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... 

தொடர்புடைய செய்திகள்

போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகைகளுக்கு தொடர்பு? - ரகுல் பிரீத்சிங், சாரா பெயர்கள் வெளியானதால் பரபரப்பு

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா முன்னணி நடிகைகளான ரகுல்பிரீத்சிங்,சாரா அலிகான் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டதாக வலம் வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

213 views

பிற செய்திகள்

போதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - நடிகர் மகேஷ் பாபுவின் மனைவிக்கு சிக்கல்

போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

15 views

போதைப்பொருள் வழக்கு - 4 நடிகைகளுக்கு சம்மன்

போதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

110 views

போதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - அதிர்ச்சியில் தெலுங்கு பட திரையுலகம்

போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

428 views

"தியேட்டர்கள் திறந்த பிறகே மாஸ்டர் ரிலீசாகும்" - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரத்யேக பேட்டி

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகாது என்று, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

34 views

சக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 views

நடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது புகார் - கொலை மிரட்டல் விடுத்ததாக பூனம் பாண்டே குற்றச்சாட்டு

நடிகை பூனம் பாண்டேவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் காதல் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.

240 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.