தனியார் விடுதியில் கொரோனா நோயாளிகள் - வழக்கம் போல இயங்கும் விடுதி
பதிவு : செப்டம்பர் 08, 2020, 06:05 PM
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் விடுதி வழக்கம் போல இயங்கியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் விடுதி வழக்கம் போல இயங்கியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்ற எந்த ஒரு அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்த மக்கள், அங்கு உள்ள நோயாளிகள் எந்த பாதுகாப்பும் இன்றி வெளியே சென்று வருவதாகவும், மருத்துவ கழிவுகளும் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.  தொடர்ந்து, காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.