"அதிக அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 06:04 PM
முன்னுரிமை அளிக்கப்படும் துறைகளில் மாவட்ட வாரியாக கடன்கள் வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி செப்டம்பர் 4ஆம் தேதி பிறப்பித்துள்ள ஆணையைப் பற்றி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த துறைக்கான கடன்கள் குறைவாக அளிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு , இனிமேல் அதிக அளவு முக்கியத்துவம் அளித்து, கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அந்த கடித த்தில் முதலமைச்சர் சுட்டிக் காட்டி உள்ளார் .  ஏற்கனவே அதிக அளவு கடன் அளிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு இனி குறைவான அளவில் கடன்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதையும்  முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார் . தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும், இந்தத் துறைக்கான கடன்கள் அதிக அளவில், நல்ல முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆணை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்வர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்த கடன் தொகையை அதிகரிக்க முயற்சி செய்யாமல், அதிக கடன் பெறும் மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, குறைவாக கடன் பெறும் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு, இதற்கான நிதியை திருப்பி விட முயற்சிப்பது தவறான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . இதற்கு பதிலாக, அதிக அளவில் இத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஐ.நா. பொது சபைக் கூட்டம் திங்களன்று தொடங்குகிறது" - பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்பு

வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

42 views

"இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு குழுவில் தென்னிந்தியர்கள் இடம்பெற வகை செய்ய வேண்டும்" - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் தென்னிந்தியர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

23 views

பிற செய்திகள்

"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

14 views

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

61 views

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

14 views

கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

69 views

தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

90 views

"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி

பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.