போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:38 PM
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ராகிணி திவேதியை தொடர்ந்து 
சஞ்சனாவையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி, போதைப்பொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு விசாரணைக்காக சஞ்சனா கல்ராணியை பெங்களூருவில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்துச்சென்றனர். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.