அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு - தமிழக அரசு, யுஜிசி, ஏஐசிடிஇ-க்கு உத்தரவு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:28 PM
அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மாணிய குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், தமிழக அரசுக்கு இல்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.