காணொலி மூலம் தி.மு.க. மாதிரி பொதுக் குழு - ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:13 PM
தி.மு.க. பொதுக் குழு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று மாதிரி பொதுக்குழு நடைபெற்றது.
தி.மு.க. பொதுக் குழு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று 
மாதிரி பொதுக்குழு  நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை பொதுக் குழு மற்றும் 2 முறை செயற்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் விதியாகும் தி.மு.க. பொதுக்குழு முதல் முறையாக  காணொலி  காட்சி மூலமாக நாளை  நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. வின் 67 கட்சி மாவட்டங்களில் இருந்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் மாதிரி பொதுக் குழு மதியம் 12.30 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இருந்து ஸ்டாலின், துரை முருகன்,  டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்இளங்கோவன் பங்கேற்றனர்.மாவட்டங்களில் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து காணொலி காட்சி மூலம் பார்வையிட்ட ஸ்டாலின், பொதுக் குழுவில்  நாளை எத்தனை பேர் பேச உள்ளனர் மற்றும் அவர்களது  விவரங்களை கேட்டறிந்ததுடன், வரைவு  தீர்மானம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.