பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான வழக்கு தள்ளுபடி
பதிவு : செப்டம்பர் 08, 2020, 03:48 PM
நாள்தோறும் அதிகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாள்தோறும் அதிகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய  பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாஜி தாக்கல் செய்த பொதுநல மனு நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வாதிட முயன்றால் அபராதம் விதிக்க நேரிடும் என மனுதாரரை எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். மனுவை திரும்பப் பெற்றதை தொடர்ந்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.