ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 02:52 PM
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.  சம்பவம் நடந்த அன்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வெளியே சென்றிருந்தார் என்றும் அவர் காவல் நிலையத்தில் இல்லை என்று அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும் ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், சி.பி.ஐ. எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து உள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.  ஸ்ரீதருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.  இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும்,   தற்போது ஜாமீன் வழங்கினால்,  சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து 
வழக்கு தொடர்பான விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு,  தீர்ப்பு அறிவிப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..?

சிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி

253 views

பிற செய்திகள்

பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கடும் வாக்குவாதம்?

முதலமைச்சராக்கியது யார் என ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இடையே செயற்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

16 views

பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்விற்கு, பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

22 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

44 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.