இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு - சீனாவின் குற்றச்சாட்டை நிராகரித்தது ராணுவம்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 01:45 PM
இந்தியா முன்னெச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன அரசு தெரிவித்த குற்றச்சாட்டை, இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியா முன்னெச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன அரசு  தெரிவித்த குற்றச்சாட்டை, இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில், இந்தியா படைகளை பின்வாங்கிய நிலையில், சீனா தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோலை தாண்டிச் செல்ல இந்திய ராணுவம் முயலவில்லை என்றும், அத்துமீறி நுழைந்து எந்த இடத்தையும் ஆக்கிரமிக்க முயலவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. அரசியல், ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஒப்பந்தத்தை மீறி சீனா தான் அத்துமீறி நடந்து கொள்வதோடு, துருப்புக்களை அதிகரித்து வருவதாக ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. நேற்று எல்லையை ஒட்டியுள்ள இந்திய முன்களப் பகுதிக்கு வந்த சீன வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டு, இந்திய வீரர்களை அச்சமூட்ட முனைந்துள்ளனர். அதேநேரத்தில் நமது வீரர்கள், எவ்வித அத்துமீறலும் இன்றி  உரிய பதிலடி கொடுத்துள்ளனர்​ எனவும், எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், எத்தகையை விலை கொடுத்தும்  நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்யும் என தெரிவித்துள்ள இந்திய ராணுவம், உள்ளூர் மற்றும் உலக நாடுகளை ஏமாற்ற சீனா நாடகம் ஆடுவதாகவும் தெரிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.