முல்லைப்பெரியாறு அணை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 01:31 PM
முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பருவமழை காலத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 130 அடியாக குறைத்து, நீரை தேக்ககோரிய மனுவுக்கு, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2006, 2014 மற்றும் 2018 ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தான் அணையில் நீர் தேக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளதாகவும், மனுதாரர் ரசூல் ஜாய் கூறியது போன்ற எந்த அபாயத்தையும் மேற்பார்வை குழு கண்டறியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, அணை, பாதுகாப்பாக உள்ளதாகவும், நிலநடுக்கத்தை தாங்கும் உறுதியுடையது என மேற்பார்வை குழு ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

எனவே, அணையில்130 அடியாக குறைத்து நீரை தேக்க வேண்டும் என்பது, உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்றும்,

நேரத்தை வீண்டிக்கும் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.