கூடுதல் கட்டணத்திற்கு பயணிகளை ஏற்றி சென்ற ஆம்னி பேருந்து பறிமுதல்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 12:58 PM
மதுரையில் அரசின் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்தை, ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரையில் அரசின் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்தை, ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுக்கு பின்னர், சில தனியார் பேருந்துகள், சென்னைக்கு ரூபாய் மூவாயிரம் வரை கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது. அதன் ஒர் பகுதியாக  சாத்தன்குளத்திலிருந்து, 40 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்ற பேருந்து சித்தாம்பட்டி சுங்கசாவடியை கடந்தபோது, ஆர்டிஓ அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனையிட்டார். அப்போது, போதுமான ஆவணங்கள் இல்லாமலும், அதிக லாபத்துக்கு கூடுதல் கட்டணத்துடன் பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணிகளுக்கு மாற்று வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.