மருத்துவக் காப்பீட்டு குளறுபடி - ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதிவு : செப்டம்பர் 07, 2020, 09:45 PM
கொரோனாவால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உரிய சிகிச்சைக் கட்டணங்களை, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா தொற்று, ஆர்டி பிசிஆர்   பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு மட்டும்தான், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்றுக் கொள்வதாக கூறுவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துவருவது ஒருபக்கம் இருக்க, மருத்துவக் காப்பீட்டுக் குளறுபடிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, முதலமைச்சரோ கண்டு கொள்வதாகத் தெரியவில்லை என்று ஸ்டாலின் குறைகூறியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மருத்துவக் கட்டணத்தைத் தாங்களே செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், திரைமறைவில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கட்டணங்கள்  மறுக்கப்படுவதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, மூன்று வகையான கொரோனா சிகிச்சைகளுக்குமான கட்டணங்களையும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களே கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும், ஏற்றுக் கொள்ள மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களை, தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யும் என்று எச்சரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திமுகவின் "எல்லோரும் நம்முடன்" உறுப்பினர் சேர்க்கை - "72 மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர்"

திமுகவின் எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

739 views

விவசாய மசோதா - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

159 views

கொரோனா நோயாளிக்கு பிரத்யேக ஹெல்மெட் - ஒடிசா ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

ஒடிசா ஐஐடி மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய குமிழ் வடிவ ஹெல்மெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

62 views

"தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா அறிகுறி உடன் வந்தால் அரசுக்கு தகவல் அளித்திட வேண்டும்" - புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தால் உடனே தகவல் தர தனியார் மருத்துவமனைகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

35 views

பிற செய்திகள்

"நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை"- ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள், நம் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

16 views

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.

594 views

பகத்சிங் சிந்தனைகளை முன்னெடுப்போம் - திமுக எம்.பி. கனிமொழி டுவிட்

பகத்சிங் பிறந்த நாளையொட்டி, அவருடைய சிந்தனைகளை முன்னெடுப்போம் என்று திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

42 views

குட்கா விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு - சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மனு தாக்கல்

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

24 views

விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி - நிதிஷ்குமார் கட்சியில் இணைந்தார்

பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.

48 views

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற தமிழகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு விரோதமான எந்த சட்டமாக இருந்தாலும் அதனை எதிர்ப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.