சூடு பிடித்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் களம் - கருத்துக்கணிப்பில் பின்தங்கிய அதிபர் டிரம்ப்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 06:50 PM
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர், வெளியிட உள்ள புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப், கருத்து கணிப்புகளில் எதிர் கட்சி வேட்பாளார் ஜோ பிடனை விட மிகவும் பின் தங்கி உள்ளார். இந்த நிலையில், டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், டிரம்ப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட உள்ளார். 2006  ஆம் ஆண்டு முதல் டிரம்பின் தனிபட்ட வழக்கறிஞராக பணியாற்றிய மைக்கேல் கோஹன், 2016 தேர்தலில் டிரம்பிற்கு நன்கொடை திரட்டியதில் பல முறைகேடு செய்ததாக சிறை தண்டனை அனுபவித்தார். இந்நிலையில், கடந்த மே 21ஆம் தேதி அன்று சிறையிலிருந்து வெளிவந்த மைக்கேல், டிரம்ப் குறித்து எழுதியுள்ள புத்தகம், அவரது வாக்கு வங்கியை மேலும் சரி வடையை செய்யும் என்று கருதப்படுகிறது. இந்த நூலில் டிரம்ப் குறித்து பொய்யான தகவல் இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை  தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.