இந்திய பொருளாதார வீழ்ச்சி : "அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும்" - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கருத்து
பதிவு : செப்டம்பர் 07, 2020, 06:38 PM
இந்திய பொருளாதார வீழ்ச்சியை பற்றி அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இந்திய பொருளாதார வீழ்ச்சியை பற்றி அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜிடிபி 23.9 சதவீதம் சுருங்கியுள்ள தகவல், அவர்களின் மெத்தனப் போக்கை கைவிடச் செய்யும் என்றார். கொரொனா பாதிப்பினால் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை சரி செய்ய, ஒரு பெரிய அளவிலான நேரடி செலவு திட்டத்தை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

கேரள வேளாண் அமைச்சருக்கு கொரோனா - உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

கேரளா வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமாருக்கு கொரோனா உறுதியானது , இதனை தொடர்ந்து அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,.

0 views

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது, மாநிலங்களவை - மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில் அதிரடி முடிவு

நாடாளுமன்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

20 views

கிசான் முறைகேடு விசாரணை நிலை என்ன? - எம்.பி.வில்சன் கேள்விக்கு அமைச்சகம் விளக்கம்

தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளான கிசான் முறைகேடு விவகாரத்தில், தற்போது வரை 64 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

29 views

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் - 15 நாளில் விளக்கம் அளிக்க பார்கவுன்சில் அறிவுறுத்தல்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்ததால் அவமதிப்பு வழக்கில் தண்டனையாக ஒரு ரூபாய் அபராதம் செலுத்திய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

5 views

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை :"நாடாளுமன்ற கண்ணியத்தை சிதைப்பதாக உள்ளது" - மாயாவதி பாய்ச்சல்

மாநிலங்களவையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நடந்து கொள்ளும் விதம், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்குவதாக, பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.

4 views

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

300 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.