திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு - 12 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 06:38 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற 21 திட்டங்களையும் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, 7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

சென்னை மற்றும் திருவள்ளூரில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், சென்னையில் இருந்து வரும் வழியில், தான் பார்த்த மக்களில் 40 சதவீதம் பேர் முக கவசம் அணியாமல் உள்ளதாகவும், அவர்களை முக கவசம் அணிய வைக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும், விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.