ஊராட்சி செயலாளரை பணி இடை மாற்றம் செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
பதிவு : செப்டம்பர் 07, 2020, 06:32 PM
அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்து வரும் ஊராட்சி செயலாளரை, பணி இடை மாற்றம் செய்ய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்து வரும் ஊராட்சி செயலாளரை, பணி இடை மாற்றம் செய்ய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று 8 மாதங்கள் முடிந்த நிலையில் இதுவரை எந்த தகவலும் தனக்கு வழங்காமல் ஊராட்சி செயலாளர் சக்திவேல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால், தன்னை தலைவியாக ஏற்க மறுத்து, அலுவலகத்திற்கு வரும் தபால்கள் குறித்த தகவல்களை மறைத்து, உத்தரவுகளை அவர்களே அறிவிப்பு பலகையில் ஒட்டி விடுவதாக கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் முற்றிலும் புறக்கணிப்பதுடன் மத்திய மாநில அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல தனக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக கூறியுள்ளார். ஆகவே ஊராட்சி செயலாளரை பணி இட மாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.