நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை - ரூ.3.5 லட்சம் மதிப்பிலான வலைகளை மிரட்டி வாங்கியதாக புகார்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 06:01 PM
நாகையிலிருந்து மீன் பிடிக்க சென்ற, மீனவர்களிடம், நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள், மூன்றரை லட்சம் மதிப்பிலான வலைகளை திருடி சென்றுள்ளனர்.
நாகையிலிருந்து மீன் பிடிக்க சென்ற, மீனவர்களிடம், நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள், மூன்றரை லட்சம் மதிப்பிலான வலைகளை திருடி சென்றுள்ளனர். நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ராஜா, ராமக்கண்ணு, சம்பந்தன் ஆகிய 4 மீனவர்கள் 29ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 5 அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் கத்தி, பெட்ரோல் வெடிகுண்டு, இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் படகில் ஏறிய கடல் கொள்ளையர்கள், மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்களது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட நாகை மீனவர்கள் இன்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளனர். 

பிற செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

9 views

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

112 views

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

22 views

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் நாகையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.

372 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

53 views

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

252 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.