"புதுச்சேரிக்குள் தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்ல"
பதிவு : செப்டம்பர் 07, 2020, 04:53 PM
தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படாத‌தால், பயணிகள் அவதி அடைந்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளூர் பேருந்துகளை இயக்க அரசு அறிவித்து இருந்தாலும் 4மாதத்திற்கான சாலை வரியை அரசு ரத்து செய்தால் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்காமல் உள்ளனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளுக்கு  அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் சென்னையில்  இருந்து வந்த தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் எல்லையில் இருந்து புதுச்சேரிக்குள் நடந்து சென்று  உள்ளூர் பேருந்தில் பயணிக்கின்றனர்.  புதுச்சேரி அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் எதுவும் தமிழகப்பகுதிகளுக்குள் இயக்க அனுமதி வழங்க வில்லை. எனவே இருமாநில அரசுகள் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.