பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் மோசடி - 2 பேர் கைது
பதிவு : செப்டம்பர் 07, 2020, 04:48 PM
ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில், விவசாயிகள் இல்லாதவர்களை இணைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில், விவசாயிகள் இல்லாதவர்களை இணைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இப்பகுதியில், விவசாயிகளை சேர்க்க, தனியார் கணினி மையத்திற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணினி மைய உரிமையாளர்கள் ராகுல்காந்தி, கலையரசரனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் சுமார் 360 விவசாயிகள் அல்லாதவரை, திட்டத்தில் சேர்த்து பணம் பெற்றதாக தெரிய வந்துள்ள நிலையில், இதில் தொடர்புடைய வேளாண்மைத்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.