புதிய கல்விக் கொள்கையை அனைவரும் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : செப்டம்பர் 07, 2020, 01:31 PM
புதிய கல்விக் கொள்கையை அனைவரும் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை தொடர்பான காணொலி மூலமாக நடைபெற்று வரும் ஆளுநர்கள் மாநாட்டில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர், கடந்த 100 ஆண்டுகளாக இருந்த சிக்கல்களுக்கு இந்த கல்வி கொள்கையில் தீர்வு உள்ளதாக தெரிவித்தார். தங்கள் விருப்பப்பட்ட பாடங்களை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கும் வகையில், புதிய தேசிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எவ்வித குறைபாடும் அழுத்தம் இல்லாத வகையில் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கல்வியில் அரசின் தலையீடு, செல்வாக்கு இந்த கொள்கையில் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கல்வி கொள்கை மற்றும் முறை  முக்கியமானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு கொள்​கை போன்றது தான் கல்விக் கொள்கையும் என தெரிவித்துள்ள பிரதமர்,  புதிய கல்விக் கொள்கையை அனைவரும் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும் விடுத்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.