சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் குழுக்கள் அமைப்பு
பதிவு : செப்டம்பர் 07, 2020, 01:25 PM
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் அமைத்துள்ள குழுக்களில், கட்சி தலைமைக்கு எதிராக கருத்து கூறியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சி  தலைமை தொடர்பாக கேள்வி எழுப்பிய 23 பேரில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா மற்றும் ராஜ்பாப்பருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் சோனியாக காந்தியின் தீவிர விசுவாசியாக கருதப்படும் சல்மான் குர்ஷித்துக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கட்சித் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய உத்தர பிரதேச  முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் காத்திரியை பயிற்சி மற்றும் பணியாளர் மேம்பாட்டு குழுத் தலைவராக கட்சி மேலிடம் நியமித்துள்ளது. இதேபோல, சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவின் தீவிர ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.