தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
பதிவு : செப்டம்பர் 06, 2020, 08:31 PM
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில், வரும் 10-ஆம் தேதி சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில், வரும் 10-ஆம் தேதி  சில  இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட், அருணாச்சல், மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளா, மாஹே,  சிக்கிம், அசாம், மேகாலயா மற்றும் மேற்குவங்கத்திலும் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கோவை, நீலகிரி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும்
என எச்சரித்துள்ளது. 


5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மழை - வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. 

வத்தலக்குண்டு சுற்றுவட்டாரத்தில் 2 மணி நேரம் மழை - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள நிலக்கோட்டை, பள்ளபட்டி, கொடைரோடு, செம்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகி உள்ளது. மழையால் மானாவாரி பயிர்களை பயிரிட்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

உடுமலையில் 2 மணி நேரம் இடைவிடாது பெய்த மழை - வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. அங்கு காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கனமழை - தலையணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர்

மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த மழையால், வாசுதேவநல்லூர் தலையணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், உள்ளார், சிவகிரி, ராமநாதபுரம், தேசியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நெல் நடவுக்கு நிலங்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை - சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை  உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமியை  தவிர பக்தர்கள் கோயிலுக்கு செல்ல  அனுமதி இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

சின்னசுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - தடையை மீறி ஆனந்த குளியல் போடும் பொதுமக்கள்

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சின்னசுருளி அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா அச்சம் காரணமாக அருவிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை தடுக்கும் வகையில் அருவிக்கு முன்பாக வனத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

259 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

61 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

35 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

13 views

பிற செய்திகள்

விடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

0 views

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 views

ஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.

6 views

"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது

12 views

பொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

68 views

"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.