திருடப் போன இடத்தில் மகன் பெயரை எழுதி வைத்த திருடன் -போலீசாரிடம் சிக்கிய புது கொள்ளையர்கள்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 07:27 PM
திருடச் சென்ற இடத்தில் மதுபோதையில் கொள்ளையர்கள் செய்துவிட்டு வந்த செயலே அவர்களை இன்று கம்பி எண்ண வைத்திருக்கிறது.
சென்னை சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செளந்தராஜன். தனியார் பள்ளியின் ஆசிரியரான இவர், சொந்த ஊரான ஆரணிக்கு சென்ற நிலையில் சென்னையில் உள்ள இவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவே அவரும் உடனே சென்னைக்கு விரைந்து வந்தார். 

வீட்டில் இருந்த 24 இன்ச் எல்இடி டிவி, லேப்டாப், 2 கிராம் தங்க நகை மற்றும் டூவீலர் என எல்லாவற்றையும் துடைத்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சிலிண்டரையும் விட்டுவைக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில், செளந்தரராஜனின் வீட்டு சுவற்றில் விஷ்ணு என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. மேலும் ஒரு கால் செருப்பும் கிடந்ததை தொடர்ந்து போலீசார் அதனை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்தனர். 

இந்த சூழலில் தான் செம்மஞ்சேரி பகுதியில் வாகன சோதனையின் போது விநாயகர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆக்டிவா பைக் ஒன்றை ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகம் வலுத்துள்ளது. 

வாகனத்தின் சேஸிங் நம்பரை வைத்து விசாரித்த போது அது ஓட்டி வந்தவருக்கு சொந்தமான பைக் இல்லை என உறுதியானது. வண்டியில் ஒட்டப்பட்டிருந்த சிலுவை ஸ்டிக்கர் மீது விநாயகர் ஸ்டிக்கரை ஒட்டி வைத்தது உறுதியானதால் புகார் அளித்த செளந்தரராஜனிடம் போலீசார் வரவழைத்தனர். அப்போது தன்னுடைய வாகனம் தான் இது என அவர் கூறியிருக்கிறார். 

வாகனத்தை ஓட்டி வந்த மதன் என்பவரை பிடித்து விசாரித்த போது தான் அவர் செளந்தரராஜன் வீட்டில் கைவரிசை காட்டியதும் உறுதியானது. குடிப்பதற்கு பணம் இல்லாமல் சுற்றி வந்த மதன், தன் நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். 

இதற்காக செளந்தரராஜன் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற அவர்கள், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வழித்து எடுத்து சென்றனர். அப்போது போதையின் உச்சத்தில் இருந்த மதன், தன் மகன் விஷ்ணுவின் பெயரை திருடப்போன வீட்டுச்சுவற்றில் ஆசையாக எழுதி பார்த்துள்ளார். 

மேலும் காலில் போட்டிருந்த ஒரு செருப்பு திருடச் சென்ற இடத்தில் விழுந்ததும், ஒற்றைக் கால் செருப்புடன் தன் வீட்டுக்கு வந்ததும் தெரியாத அளவுக்கு போதையில் இருந்துள்ளார் மதன். கடைசியில் அவர்கள் திருட்டு தொழிலுக்கு புதியவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவல் அனைத்தையும் கேட்டு சிரித்த போலீசார், கொள்ளையடித்த அனைத்து பொருட்களையும் கைப்பற்றினர். பின்னர் மதன், ராகுல் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

ரத்தமும் சதையுமாக பல கொள்ளை சம்பவங்கள் நடக்கும் சூழலில் மது போதையில் ஜாலியாக கொள்ளையடித்து விட்டு சிக்கிய இந்த சம்பவம் கிட்டத்தட்ட சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை போலவே அரங்கேறியிருக்கிறது..

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வெடிவிபத்து - கேஸ் பலூன் மீது பட்டாசு விழுந்ததால் பலர் காயம்

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

920 views

சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் - வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பது தொடர்பாக வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உய​ர்நீதிமன்றம்அதிரடி உத்தரவிட்டுள்ளது.

181 views

முன்கள பணியாளர்களுக்கு நன்றி கூறும் பாடல் - பாடலை வெளியிட்டார் சென்னை மாநகர காவல் ஆணையர்

காவல்துறை சார்பில் 'சலாம் சென்னை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து இந்த பாடலை வெளியிட்டனர்.

93 views

விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் மையம் திறப்பு - பயணிகள் நிம்மதி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் கவுண்டா்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

19 views

பிற செய்திகள்

ஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.

6 views

"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது

12 views

பொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

61 views

"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

18 views

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

69 views

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.