சொந்த கடையில் நகையை திருடிய இளைஞர் - சென்னையில் நடந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 07:10 PM
சென்னையில் நகைக்கடையில் 14 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் கடை உரிமையாளரின் மகனே கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
சென்னை யானைக்கவுனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் சுபாஷ் போத்ரா. இவர்கள் இருவரும் சேர்ந்து நகைப்பட்டறையுடன் இணைந்த நகைக்கடையை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தனர். 

தங்கத்தை மொத்தமாக வாங்கி விதவிதமான நகைகளாக மாற்றி அதை சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது இவர்களின் வழக்கம். அன்றைய தினம் விற்பனை முடிந்ததும் நகைகளை லாக்கரில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். 

வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டிவிட்டு பின் அதை பத்திரமாக வைத்து விடுவார்களாம். அதன்படி கடந்த மாதம் 21ஆம் தேதி நகைகளை வாடிக்கையாளர்களிடம் காட்டி விட்டு லாக்கரில் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். 

மறுபடியும் நகைகளை 25ஆம் தேதி எடுத்து வாடிக்கையாளர்களிடம் காட்ட முயன்ற போது லாக்கரில் இருந்த 14 கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ந்து போன அவர்கள், உடனே போலீசில் புகார் அளித்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் தான் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கடையின் பூட்டோ, லாக்கரின் பூட்டோ உடைக்கப்படாமல் இருந்ததால் நகையை தெரிந்தவர்கள் தான் திருடியிருக்க வேண்டும் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக சிசிடிவி கேமராக்கள், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போது தான் சுபாஷ் போத்ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா போலீசில் சிக்கினார். 

ஆன்லைன் டிரேடிங் தொழில் நடத்தி வந்த ஹர்ஷ் போத்ராவுக்கு அதில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கு தெரியாமல் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த ஹர்ஷ் போத்ரா, இழப்பை சரி கட்ட தன் தந்தையின் கடையில் கை வரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. 

தந்தைக்கு தெரியாமல் கடையின் சாவி மற்றும் லாக்கர் சாவிகளை எடுத்து வந்து நகைகளை திருடியுள்ளார் அவர். திருடிய 14 கிலோ தங்கத்தில் 12 கிலோ தங்க நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள வியாபாரிகளுக்கான லாக்கரிலும், மீதமுள்ள 2 கிலோ நகைகளை கடையின் வேறொரு பகுதியிலும் பதுக்கி வைத்துள்ளார் அவர். 

பெற்றோருக்கு தெரியாமல் செய்த தொழில் இழப்பில் முடியவே, அதை சரிகட்ட திருட்டு தொழில் ஈடுபட்டு இன்று சிறையில் இருக்கிறார் ஹர்ஷ் போத்ரா... 1

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

235 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

49 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

30 views

பிற செய்திகள்

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது.

4 views

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 views

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் : தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களும் இறுதி செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

160 views

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.

23 views

பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.