பொது மக்கள் விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 03:08 PM
தமிழக முதல்வர் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், பொது மக்கள் விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், பொது மக்கள் விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.