நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை - 524 நீண்ட தூர பேருந்துகள் இயக்கம்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 01:21 PM
மாற்றம் : செப்டம்பர் 06, 2020, 03:31 PM
நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை துவங்குவதால், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தென் மாவட்ட பேருந்துகளுக்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல்கட்டமாக 524 நீண்ட தூர பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. முன்பதிவு செய்யாதவர்களுக்கும் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு பேருந்தில் 26 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.  சூழலுக்கு ஏற்ப பயணத்தின்போது இடையே பேருந்து நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இதுபோல, நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகளை இயக்குவதால், இரவு நேரங்களில் கவனமாக இருக்குமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.