"பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் கிடையாது" - பள்ளிக்கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 06, 2020, 12:38 PM
பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது என்றும், வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்கள் கணக்கிடுவது கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையவழி கல்வி தொடர்பான புகார்களை, மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு,  பெற்றோர்கள் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புக்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வி ஆணையர் தற்போது அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

73 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

19 views

பிற செய்திகள்

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

4 views

கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

21 views

சசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

293 views

தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

29 views

"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி

பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

12 views

விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.