தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு தொடங்கியது
பதிவு : செப்டம்பர் 06, 2020, 11:56 AM
இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியில் சேர யு.பி.எஸ்.சி-ஆல் நடத்தப்படும் NDA, NA தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது.
டெல்லி, மும்பை, லக்னோ, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நாடு முழுவதும் 41 நகரங்களில் நடைபெறும் பாதுகாப்பு அகாடமி தேர்வை, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி வருகின்றனர்.
வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் பாதுகாப்பு அகாடமி தேர்வுகள், ஊரடங்கால் இந்த முறை இன்று ஒரே நாளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வுக்கு பதிவு செய்திருந்தவர்களுக்கும், இன்றைய தினமே தேர்வு எழுதுகின்றனர். கணிதம், பொதுத் திறன் ஆகிய பிரிவுகளில் 900 மதிப்பெண்களுக்கு, 5 மணி நேரத் தேர்வாக பாதுகாப்பு அகாடமி தேர்வு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கணிதப் பிரிவுக்கான தேர்வும், நண்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுத்திறன் பிரிவுக்கான தேர்வும் நடைபெறுகிறது. சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்று வரும் தேர்வை 288 பேர் எழுதி வருகின்றனர். முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைப் பின்பற்றி, ஒரு தேர்வறையில் 24 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இன்று மாலையே தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக யு.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.