பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு - போலி விவசாயிகளின் வங்கி கணக்கு முடக்கம்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 11:40 AM
பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி, கரூர் மாவட்டங்களில் சுமார் 9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான்  நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் போலி விவசாயிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு, 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 2 கோடி என  மொத்தம் 7 கோடி ரூபாய் அரசின் கணக்கில் செலுத்தப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் ரூ 1.4 கோடி பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இதுவரையில் 4 புள்ளி 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது மேலும் 1 கோடியே 40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலூரில் மட்டும் போலி விவசாயிகளிடம் இருந்து 5 கோடியே 60 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ரூ.12.40 லட்சம் பறிமுதல்

இதுபோல, கரூர் மாவட்டத்தில்,  கிசான் திட்டத்தின் கீழ் மேலும் 400 பேர் போலியாக பயனடைந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இது தவிர, மேலும், 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

127 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

46 views

பிற செய்திகள்

இசை உலகை விட்டுப் பிரிந்தார் எஸ்.பி.பி. - தேகம் மறைந்தாலும் இசையாய் காற்றில் மலர்ந்த எஸ்.பி.பி.

பொறியாளராக வேண்டும் என்று கனவு கண்டவர், தமிழ்த் திரையுலகை தன் வசீகரக் குரலால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப்போட்டார். மறைந்த பின்னணி பாடகர், எஸ்.பி.பி.யின் திரைப்பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திரும்பிப் பார்க்கலாம்.

39 views

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

சென்னையில் இன்று பிற்பகல் காலமான பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல், நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

89 views

"எஸ்.பி.பி.க்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

801 views

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

93 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1173 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.