முழு ஊரடங்கு இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமை - இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 11:07 AM
முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளில் மக்கள் குவிந்தனர்.
கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது, அது ரத்து செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு ரத்துக்கு பிந்தைய, முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று  இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் மக்கள் குவிந்தனர். 5  மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படுவதால் சென்னை மாநகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதுபோல, காலையில் இருந்தே தேனீர் கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் இயங்குவதால், சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. 

மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த வியாபாரிகள் - சோதனைக்குப்பின் மீன்கள் வாங்கி சென்றனர்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன்களை வாங்குவதற்காக மீன் வியாபாரிகள், பொதுமக்கள்  அதிகளவில் குவிந்தனர். எனினும்,  நோய் தொற்று பரவாமல் இருக்க, உரிய அனுமதி பெற்ற மீன் வியாபாரிகள் மட்டுமே காவலர்களின் சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டு மீன்கள் வாங்கி சென்றனர். 
ஒருசில வியாபாரிகளை தவிர, பெரும்பாலானோர் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியில்லாமல் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றனர். இதனால் காசிமேடு கடற்கரை திருவிழா போல் களைகட்டியது.

முழு ஊரடங்கு ரத்து - வாகன போக்குவரத்து அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை வாகனங்கள் அதிக அளவில் கடந்து செல்கின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சுங்கச்சாவடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் கூட்டத்தில் மதுரை மாநகரம் - சாலையில் அதிகரித்த வாகன போக்குவரத்து 

கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுரையில் இந்த ஞாயிற்றுக்கிழமையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாததால், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு காணப்படுகிறது.

இயல்பு நிலைக்கு திரும்பிய கோவை நகரம்

பல வாரங்களுக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லாததால், கோவை மாநகரமும்,  இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொதுமக்கள் முக கவசங்களுடன் வீடுகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். காலையில் இருந்தே கடைகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

நெல்லை நகர சாலைகளில் வாகன போக்குவரத்து - சாலைகளில் அதிகரித்துள்ள மக்கள் கூட்டம்

முழு ஊரடங்கு இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் சகஜமான முறையில் சாலைகளில் வலம் வருகின்றனர். மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்காக 4 மண்டலங்களிலும் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுகிழமையில் இறைச்சி கடை திறப்பு - சிக்கன் விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிருப்தி 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பல மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சி வாங்க மக்கள் அதிக அளவில் குவிந்தனர். சென்ற வாரம் 150 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்ட கோழிக்கறி, இன்றைய தினம் 220 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டதால் அசைவ பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். எனினும், மக்கள் சமூக விலகலை கடைபிடித்து நின்று, விருப்பமான இறைச்சியை வாங்கிச் சென்றனர். 

ஞாயிற்றுகிழமை ஊரடங்கு ரத்து எதிரொலி - இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம் 

தமிழகத்தில் இன்று முதல் ஞாயிற்றுகிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கடைகளுக்கு வந்த பெரும்பாலான மக்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், தொற்று பரவல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

125 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

46 views

பிற செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

சென்னையில் இன்று பிற்பகல் காலமான பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல், நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

71 views

"எஸ்.பி.பி.க்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

752 views

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

91 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1141 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

73 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

201 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.