கிசான் திட்ட பயனாளிகள் சேர்க்கை - திருச்சியிலும் முறைகேடு நடந்தது அம்பலம்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 03:15 PM
பிரதமரின் கிசான் உதவித் திட்ட பயனாளிகள் சேர்க்கையில், திருச்சியிலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அந்தந்த மாவட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் திருச்சி மாவட்டத்தில் 15 வட்டங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், விவசாயிகள் இல்லாதவர்கள், கிசான் திட்டத்தில் ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.