"உரிமைக்காக போராடிய தியாகத்தின் திருவுருவம் வ.உ.சி."- திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 01:32 PM
தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்தி போற்றுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்தி  போற்றுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவம் வ.உ.சி என்று கூறியுள்ளார். வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிரான போர்க் குணத்துக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சாமைக்கும், அயராத உழைப்புக்கும் அரிய உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் வ.உ.சிதம்பரனார் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திமுகவின் "எல்லோரும் நம்முடன்" உறுப்பினர் சேர்க்கை - "72 மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர்"

திமுகவின் எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

734 views

விவசாய மசோதா - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

157 views

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணி :"உள்ளூர் மக்களுக்கு முக்கி​யத்துவம் கொடுங்கள்" - எம்.பி. திருச்சி சிவா வேண்டுகோள்

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

32 views

பிற செய்திகள்

விடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

10 views

"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

19 views

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

75 views

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

19 views

கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

84 views

தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.