மெல்லிய இலையில் அசத்தல் ஓவியம் - புதிய வேலையை உருவாக்கிய இளம்பெண்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 12:42 PM
பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுவானா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மெல்லிய இலையில், ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுவானா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மெல்லிய இலையில், ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த 23 வயதான மேரிமே என்ற இளம்பெண், காய்ந்த மற்றும் பச்சை இலைகளில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, மைக்கேல் ஜாக்சன், கொரோனா முன்கள பணியாளர்களின் உருவங்களை வரைந்து அசத்துகிறார். ஒரு இலை ஓவியம் இந்திய மதிப்பின்படி 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கலிபோர்னியாவில் அதிகரிக்கும் வெப்பம் - விலங்குகளுக்கு நீர் சத்து மிகுந்த உணவுகள் 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் உயிரியல் பூங்காவில், வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பராமரிக்கப்படும் ஆயிரத்து, 400 விலங்குகளுக்கும் கேரட், ஆப்பிள், ஆரஞ்சு உள்பட பல்வேறு நீர் சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வெப்பம் நோய்களால் விலங்குகள் இறப்பதை தவிர்க்க முடியும் என பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சமத்துவமின்மையை கண்டித்து போராட்டம்  - நீர் பீய்ச்சி அடித்து மக்களை கலைத்த போலீஸ் 

சிலியில் நிலவும் சமத்துவமின்மையை கண்டித்து, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு தளர்வுகளால் தலைநகர் சாண்டியாகோவில் திரண்ட மக்கள் அதிபர் செபாஸ்டியன் பினேராவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அங்கு வந்த சிலி போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து மக்களை கலைத்தனர். ஆங்காங்கே சிதறி ஓடிய மக்கள் போலீஸ் மீது ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

237 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

49 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

15 views

பிற செய்திகள்

சீனாவில் பரவும் புருசெல்லோசிஸ் பாக்டீரியா தொற்று - வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகள்

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பிரச்சினையே தீராத நிலையில், அங்கு புதியதாக ஒரு பாக்டீரியா தொற்று ஒன்று பரவ தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

4177 views

"ஐ.நா. பொது சபைக் கூட்டம் திங்களன்று தொடங்குகிறது" - பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்பு

வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

26 views

இலங்கை படகை இந்திய மீனவர்கள் மூழ்கடித்ததாக புகார் - இந்திய விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இலங்கை படகை முட்டி மூழ்கடித்த இந்திய விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

6 views

தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது - அமெரிக்காவில் டிக்-டாக், வி-சாட்டுக்கு தடை

அமெரிக்காவில் டிக்-டாக், வி-சாட் செயலிகளுக்கு வரும் ஞாயிறு முதல் தடை விதிக்கப்படுகிறது.

12 views

கொரோனா தடுப்பு மருந்து விவகாரம்:"டிரம்பின் பேச்சை நம்ப வேண்டாம்" - அமெரிக்கர்களுக்கு ஜோ பிடன் கோரிக்கை

கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் அதிபர் டிரம்பின் பேச்சை நம்ப வேண்டாம் என்று அமெரிக்க மக்களை, ஜோ பிடன் கேட்டுக் கொண்டுள்ளார்

60 views

கொழும்பு துறைமுக திட்டத்தின் 6 வது ஆண்டு விழா - கோல்ப் விளையாடிய மகிந்த ராஜபக்ச

இலங்கையின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஆறாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.