விபத்தில் கைமுறிந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை - கோமா நிலைக்கு சென்றவர் உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 05, 2020, 11:41 AM
பெண் சாவுக்கு காரணமான தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை அடுத்த வடபுழுதியூர் மதுரா மேட்டுத்தெருவை சேர்ந்த சின்னப்பன் மனைவி விண்ணரசி தனது மைத்துனருடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.  போளுர் சாலையில் அவர்கள்  சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் விண்ணரசிக்கு கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து , தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விண்ணரசிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கோமாவுக்கு சென்ற விண்ணரசி நினைவு திரும்பாமலேயே, வேலூர் தனியார் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்கு கொண்டு செ​ல்லப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்க்ள திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடற்கூராய்வுக்கு பின்னர் உடலை வாங்க மறுத்து விண்ணரசியின் உறவின​ர்கள், அரசு மருத்துவமனையின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து,  விண்ணரசியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது.

தொடர்புடைய செய்திகள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

69 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

22 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

17 views

பிற செய்திகள்

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

16 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

33 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

41 views

ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது

10 views

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - அமைச்சர் அன்பழகன் இன்று மாலை வெளியிடுகிறார்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

67 views

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.

584 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.