கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அங்கொடா லொக்கா - புகைப்படங்கள் வெளியீடு
பதிவு : ஆகஸ்ட் 12, 2020, 07:42 PM
கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அங்கொடா லொக்கா எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா கோவையில் 2018 முதல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூக்கை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைபடங்களை தனியார் மருத்துவமனையில் இருந்து சேகரித்து உள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, அங்கொடா லொக்காவின் பெற்றோரின் ரத்த மாதிரிகளை சேகரித்து உள்ள இலங்கை போலீசார், தூதரகம் மூலம் அவற்றை தமிழகம் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் டி.என்.ஏ.வை ஒப்பிட்டு பார்த்து இறந்தது அங்கொட லொக்கா என்பதை உறுதிபடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.