தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி சேகர் மீது புகார்
பதிவு : ஆகஸ்ட் 11, 2020, 05:53 PM
பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியும், தேசியக் கொடியை அவமதித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்துள்ளார். எஸ்.வி. சேகர் அதிமுக கொடி குறித்து பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இதற்கு அமைச்சர்கள் தொடங்கி முதலமைச்சர் வரை கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மீது இந்த முறை, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.