இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்
பதிவு : ஆகஸ்ட் 04, 2020, 01:50 PM
மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜூன் மாதம், மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங், தற்கொலை செய்து கொண்டார்.  அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல் வெளியான நிலையில், இது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் தந்தை, காதலி ரியா, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன்பு தமது பெயரை, கூகுளில் தேடி அது குறித்த கட்டுரைகளை, படித்தாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்தும், செய்திகளை படித்ததாக மும்பை போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது மேலாளர் திஷா சாலியன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது பெயரையும், சுஷாந்த் கூகுளில் தேடியதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங், பைபோலார் டிஸ் ஆர்டர் எனும் மன அழுத்த நோய்க்கு, மன நல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து அவரது காதலி ரியாவுக்கு, 15 கோடி ரூபாய் பண பறிமாற்றம் செய்ததாக கூறிய புகார் முற்றிலும் தவறு என்றும், மும்பை போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விஸ்வரூபம் எடுத்து நிற்கும் போதைப் பொருள் விவகாரம் - தீபிகா படுகோன் மேலாளருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து திரை பிரபலங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரும் இதில் சிக்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

160 views

பிற செய்திகள்

தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி - "அண்ணாத்தே" படத்தில் வெளிவரும் என படகுழு தகவல்

அண்ணாத்தே படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு தேவையான பஞ்ச் டயலாக்குகளை அவரே எழுதி உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.

201 views

ஆக.5-ல் மருத்துவமனையில் எஸ்.பி.பி அனுமதி - ஆக.20-ல் கூட்டு பிரார்த்தனை நடத்திய திரையுலகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடந்த 50 நாட்களில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை குறித்த விவரங்களை பார்ப்போம்.......

382 views

பா.ரஞ்சித், ஆர்யா இணையும் அடுத்த படம் - கட்டுமஸ்தான உடலுக்காக வருத்திக்கொள்ளும் ஆர்யா

நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

15 views

நலமுடன் இருப்பதாக நடிகர் ராமராஜன் அறிக்கை - முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

341 views

மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

2827 views

விஸ்வரூபம் எடுக்கும் போதை பொருள் வழக்கு - நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் இன்று விசாரணை

போதைப் பொருள் தொடர்பான வழக்கில் இந்தி நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் தடுப்பு கட்டுப்பாட்டு வாரியம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ரகுல் பிரீத்சிங் இன்று ஆஜராக உள்ளார்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.