இந்தியா - சீனா எல்லை விவகாரம் : கமாண்டர்கள் மட்டத்தில் 5 ஆம் சுற்று பேச்சுவார்த்தை
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 04:19 PM
இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில், ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 5 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தியா- சீன எல்லையில், கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. லடாக்கின் மலைப் பகுதியிலிருந்து சீன ராணுவம் முழுமையாக விலகுவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்திய மற்றும் சீனப்படைகளின் ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மால்டோவில் நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைப்பதா? : ஜனநாயக மாண்பை மதிப்பிழக்கச் செய்துவிடும் - ராகுல் காந்தி

அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பது ஜனநாயக மாண்பை மதிப்பிழக்கச் செய்துவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியை விடுவிக்க இதுவே சரியான தருணம் என்று  தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள மெஹபூபா முப்தியின் சிறை தண்டனை காலம் ஓராண்டு கடந்த நிலையில்,  தற்போது மீண்டும் மூன்று மாதங்களுக்கு அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

வெற்றிகரமாக பணியை முடித்த ராணுவ வீரர் - பொதுமக்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்பு

புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர்,  21 ஆண்டு காலம் ராணுவத்தில் பணி முடித்த பின்பு சொந்த ஊருக்கு திரும்பினார், அவரை பொதுமக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்,  அப்போது சிலர் நடனமாடியும், மலர்கள் தூவியும் அவரை உற்சாகமாக வரவேற்றனர், கார்கில் போரில் பங்கேற்றுள்ள சசிக்குமார்  ஜம்மு காஷ்மீர் எல்லை , பங்களாதேஷ் எல்லை பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு விவகாரம் - மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றதாக தகவல்

பாலிவுட்டில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14  ஆம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு மர்மமாக உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவருக்கு மன அழுத்த பிரச்சினை இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர், சுஷாந்த் சிங்கிற்கு மன அழுத்த சிகிச்சை அளித்த மருத்துவரை சந்தித்து உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டில் 'பிபோலர் டிஸாடர்' (bipolar disorder)  என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங், தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சர்ச்சைகள் உள்ள நிலையில், இந்த தகவல் புதிய கோணத்தில் விசாரணை செய்ய உதவும் என போலீசார் கூறியுள்ளனர்.

மதுபானம் விலை உயர்வின் எதிரொலி - போதைக்காக சானிடைசர் குடிக்கும் விபரீதம்

ஆந்திர மாநிலத்தில் 50 சதவிகித மதுக்கடைகள் திறந்து, மது விலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் அதிக அளவில் சாராயம் காய்ச்சி விற்கப்படுகின்றது. இதை வாங்க முடியாமல் தவிக்கும் மது பிரியர்கள்,  கிருமி நாசினி மருந்தை உட்கொண்டு உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, பிரகாசம் மாவட்டத்தில் 15 பேர் இறந்நிலையில், கடப்பா மாவட்டத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சானிடைசர் குடிக்கம் வீடியோ தற்போது, வெளியாகி உள்ளது. அவர்களின் நிலையும் கவலைக்கிடம் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிர் பலியை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. 

ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் அவதி  - கர்ப்பிணியை தோளில் சுமந்த சென்ற கிராமத்தினர்

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா பகுதியில், ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், கிராமமக்கள் கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது. மறுகரையில் தயார்நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பிரசவித்த பெண்ணும், குழந்தையும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

339 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

143 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

13 views

பிற செய்திகள்

ராமர் கோயில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது - எல்.கே.அத்வானி

1990ஆம் ஆண்டில், ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது, ​​ராம ரத யாத்திரை வடிவத்தில் முக்கிய கடமையை செய்து, அதன் மூலம் எண்ணற்றவர்களை ஒருங்கிணைக்க உதவியதை நினைத்து பெருமிதம் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

298 views

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

41 views

மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

7 views

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

2518 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

16 views

இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.