"19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 02:59 PM
வரும் 4ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளது. தஞ்சாவூர்  திருவாரூர்,  நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி  மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் வரும் 6ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம்  அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

403 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

365 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

135 views

பிற செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி - சமூகவலை தளங்கள் மூலம் நிதி வசூல் செய்து உதவி

கொரோனாவால் உயிரிழந்த சென்னை ஆயுதப் படையை சேர்ந்த காவலர் நாகராஜன் குடும்பத்தினருக்கு,16 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய், 2013 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்.

2 views

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

4 views

ரிஷிவந்தியத்தில் புதிய அரசு கலை கல்லூரி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரிஷிவந்தியத்தி​ல் புதிய அரசு கல்லூரி துவக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

30 views

புதிதாக 5,914 பேருக்கு கொரோனா - 5 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

23 views

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 34,323 தனித்தேர்வு மாணவர்களின் நிலை என்ன?

10-ம் வகுப்பில் பள்ளிகளில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில் தனித்தேர்வு மாணவர்கள் 34 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

24 views

ரஷ்யாவில், தமிழக மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ரஷ்யாவில், வோல்கா ஆற்றில் குளித்த போது உயிரிழந்த 4 தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.