தேசிய கல்வி கொள்கை - தமிழக அரசு நாளை ஆலோசனை
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 11:09 AM
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் நாளை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய அ​ரசு ஒப்புதல் அளித்துள்ள தேசிய கல்வி கொள்கை பல்வேறு தரப்பிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பாடம், கல்லூரிகளில் சேர்வதற்கு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்ட அம்சங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.  

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் நாளை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

354 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

143 views

"தலைமையின் கடிதம் கிடைத்தது, குற்றச்சாட்டு தெளிவாக இல்லை" - "எனக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்" - கு.க. செல்வம்

கட்சியின் மாண்பை மீறியதாக கூறுவது இயற்கை நீதிக்கு விரோதமானது எனக் கூறும் தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நோட்டீஸை திரும்பப்பெறுமாறு கோரியுள்ளார்.

35 views

"கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

கேரள விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

59 views

மூணாறு நிலச்சரிவு - வைகோ வேண்டுகோள்

பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.