குடிபோதையில் கணவர் தகராறு செய்ததால் ஆத்திரம் - அம்மிக்கல்லை கணவர் தலையில் போட்டு கொன்ற மனைவி
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 06:26 PM
மது போதையில், தகராறு செய்த கணவர் மீது தலையில் கல்லைப் போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான குமார், தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். சம்பவத்தன்று மதுபோதையில் வந்த குமார், கத்தியை எடுத்து குழந்தைகளின் கழுத்தில் வைத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  இசக்கியம்மாள், தன் கணவரை கீழே தள்ளி அவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இசக்கியம்மாளை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

180 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

159 views

பிற செய்திகள்

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரம் - போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கின

இலங்கை தாதா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் வீட்டில் சிக்கின.

3 views

முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

27 views

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

6 views

காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

8 views

தொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது.

7 views

கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.