"50 வயதிற்கு மேற்பட்டோரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்" - கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா அதிகாரிகளுக்கு அறிவுரை
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 06:22 PM
ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, கேரள டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, கேரள டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். கேரள மாநிலம் இடுக்கி அருகேயுள்ள  தொடுபுழா பகுதியில் கேரள காவல்துறையின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அஜிதன் என்பவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். மேலும், கேரளா முழுவதும்  88 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட போலீசார் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 50 வயதிற்கு மேற்பட்ட போலீசாரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இயன்றவரை 40 வயதுக்கு உட்பட்ட போலீசாரையும் அதிகாரிகளையும் இப்பணியில் ஈடுபடுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

181 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

163 views

பிற செய்திகள்

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

1345 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

182 views

"எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு" - பிரதமர் மோடி

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

40 views

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்பு - 5 பேர் பலி

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.

31 views

உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவு -

கல்வி உலகிற்கு வழிகாட்டும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு நடைபெறுவதாகவும் இதில் இன்று பிரதமர் உரையாற்ற இருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

14 views

வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் - பிரபல நகைக்கடை கட்டிடத்தை முடக்கியது அமலாக்கத்துறை

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் 9 நிறுவனங்கள் சேர்ந்து போலி கணக்குகளையும், போலி ரசிதுகளையும் சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.