வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 01:31 PM
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ளது, கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமூக விலகலை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு-92 பேர் பலி

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து மொத்த பாதிப்பு 5 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 92 பேர் உயிரிழந்துள்ளனர். தேனியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக  சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 215 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 979 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 795 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 934 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வீட்டில் 598 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு - அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில்  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர்  ஒரே  நாளில் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலமே கொரோனா பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் அதிகரித்தள்ளதால், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1175 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

451 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

434 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

125 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33 views

பிற செய்திகள்

சிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு

திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

108 views

பாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு

ஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.

32 views

"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.

18 views

குட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

120 views

(13/08/2020) ஊர்ப்பக்கம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

31 views

திமுக VS பாஜக - கேலி செய்த தயாநிதிமாறன் - கூடா நட்பு கேடாய் முடியும் என விமர்சனம்

திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்ற வி.பி.துரைசாமியின் கருத்தை நகைப்புக்குரியது என்று தயாநிதி மாறன் கேலி செய்துள்ளார்.

987 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.