அயோத்தி ராமர் கோயில் - ஆச்சர்ய தகவல்கள்
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 12:02 PM
குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தை வடிவமைத்து கட்டடப் பணியை மேற்பார்வையிட்டவரின் பேரனின் கைவண்ணத்தில் உருவாகிறது அயோத்தி ராமர் கோவில். அது பற்றிய தகவல்களை பார்ப்போம்...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் நாகர் கட்டடக் கலையின் அடிப்படையில் அமைகிறது. 5 குவி மாடங்களுடன் 161 அடி உயர கலச கோபுரத்துடன் அமைய உள்ள இந்த கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர்ஜி சோம்புராவின் பேரன், அகமதாபாத்தை சேர்ந்த சந்திரகாந்த் பாய் சோம்புரா ஏற்றுள்ளார். இவர் தான் குஜராத்தில் உள்ள அக்‌ஷர்தாம் கோவிலையும் வடிவமைத்து கட்டியுள்ளார்.  77 வயதான சந்திரகாந்த் பாய் சோம்புராவிடம் இந்த கோயில் வடிவமைப்பு பணியை, 1990 ஆம் ஆண்டில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த அசோக் சிங்கால் அளித்துள்ளார். அப்போது கோவிலுக்குள் அளவிடும் டேப்பை கூட எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில், கால்களாலேயே அளந்து , அதன் அடிப்படையில், கோவிலுக்கான வரைபடத்தை உருவாக்கி அதற்கான பணிகளை கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்துள்ளார். முதலில் 212 தூண்கள் உடன் 3 குவிமாடங்கள் மற்றும் 141 அடி உயர கலச கோபுரத்துடன் கோவிலை கட்ட தீர்மானித்து அதற்கு ஏற்ப பணிகள் இதுவரை நடைபெற்று வந்ததாக சந்திரகாந்த் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், போதிய இடம் கிடைத்துள்ள நிலையில், ராமர் பிறந்த இடத்தில் அமைய உள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வருவார்கள் என்ற அடிப்படையில், கோவில் வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளதாக தெரிவித்தார். தற்போது 360 தூண்களுடன் விசாலமான 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கோபுர கலசத்துடன் அமைக்கப்பட உள்ளதாக சந்திரகாந்த் பாய் சோம்புரா தெரிவித்தார். கர்ப்ப கிரகத்தை விட எந்த ஒரு கட்டடமும் பெரியது ஆகி விடக் கூடாது என்ற சிற்பக்கலை மற்றும் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இந்த கோவிலை கட்ட உள்ளதாக தெரிவித்த அவர், பிரதான கோவிலை சுற்றி நான்கு சிறிய கோயில்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். கர்ப்பக்கிரகம், குடு மண்டபம், நிருத்ய மண்டபம், ரங்க மண்டபம், கீர்த்தனை மண்டபம் மற்றும் பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அமைக்கப்படுகிறது. பத்து ஏக்கரில் 3 தளங்களாக கோவில் அமைய உள்ள நிலையில், கோவில் வளாகம் 57 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட உள்ள நிலையில், மூன்றரை ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சந்திரகாந்த் பாய் சோம்புரா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில்  ஸ்ரீராம் என எழுதப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட செங்கல்கள் இந்த கோவிலின் அடித்தளத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது சிறப்பு அம்சமாகும். கோவில் படிக்கட்டுகள் 16 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. ரங்க மற்றும் நிருத்திய மண்டபங்கள் கடந்த காலங்களில், கோவிலில் பணியாற்றும்  தேவதாசி பெண்கள் நடனமாட பயன்பட்ட நிலையில், தற்போது அவை, மூன்று பக்கமும் இருந்து பகவான் ராமரை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக சந்திரகாந்த் பாய் சோம்புரா தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

393 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

26 views

பிற செய்திகள்

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

85 views

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

39 views

"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை" - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

52 views

பொதுமக்கள் முற்றுகையிட்டதால் மனவேதனை - கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

268 views

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

21 views

கொரோனாவில் இருந்து மீண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா - விரைவில் பணிக்கு திரும்புவேன் என டிவிட்டர் பதிவு

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த 2ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எடியூரப்பா , பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.