ஆவின் நிறுவனத்தின் ரூ.69 லட்சம் மோசடி என புகார் - சங்க செயலாளர் வங்கி கணக்கை முடக்க உத்தரவு
பதிவு : ஜூலை 31, 2020, 05:43 PM
மதுரை அருகே ஆவின் நிறுவனத்தின் 69 லட்ச ரூபாயை மோசடி செய்த சங்க செயலாளர் வங்கி கணக்கை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலத்திருமாணிக்கம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக இருப்பவர் ராமநாதன். அவர் அந்த சங்கத்தின் கீழ் 
உள்ள 59 கிளை சங்கங்களுக்கு வழங்க வேண்டிய கொள்முதல் தொகை  69 லட்ச ரூபாயை கையாடல் செய்துள்ளார். அந்த பணத்தை ராமநாதன் , தனது மனைவி , மகள்கள் பெயரில் வங்கியில் போட சொல்லியுள்ள்ளார். இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவர்களது வங்கி கணக்குகளை  உடனடியாக முடக்கவும் பால்வளத்துறை ஆணையர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார். ராமநாதன் கையாடல் செய்த 69 லட்ச ரூபாயை  மீட்க மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

276 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

258 views

பிற செய்திகள்

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

141 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

65 views

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

18 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

227 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

747 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.