கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவர் உயிரிழப்பு - ஆக்சிஜன் முறையாக அளிக்கவில்லை என புகார்
பதிவு : ஜூலை 31, 2020, 05:27 PM
கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவருக்கு, ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஆக்சிஜன் சரியாக செலுத்தாததால், உயிரிழந்ததாக உறவினர்கள், ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெங்களூரு நகரில் நேற்று மாலை 70 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திடீரென்று அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினை ஏற்படவே முதியவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். யோகேஷ் என்ற 33 வயது நபர் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதியவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரது உறவினர்களும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர். தனியார் மருத்துவமனையை வந்த போது முதியவர் உயிரிழந்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆக்சிஜன் செலுத்தாததால்  உயிரிழந்ததாக, குற்றம் சாட்டி ஓட்டுனர் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ஓட்டுனரை, மீட்டனர். கர்நாடகாவில்  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

392 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

160 views

பிற செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள தனது கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடினார்.

7 views

வரி செலுத்தி வருபவர்களைக் கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

முறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

282 views

கொரோனா தொற்று - முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

258 views

பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

18 views

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.

53 views

கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7 நாட்களாக வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.