"பொதுவெளியில் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு" - குஷ்பூவுக்கு பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி
பதிவு : ஜூலை 31, 2020, 01:12 PM
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது. இதனை, வரவேற்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் , நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, தெரிவித்திருந்தார். குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி,  காங்கிரசில் கருத்து சுதந்திரம் உண்டு என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றுக்கருத்து கூறினால் வரவேற்போம் என கூறியுள்ளார். ஆனால், பொதுவெளியில் கூறுவது முதிர்ச்சியின்மையை காட்டுவது என்றும், ஏதோ லாபம் எதிர்பார்ப்பது போல் கருத்து சொல்லக் கூடாது என்றும், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு என கூறியுள்ள அழகிரி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆதிக்க சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது போல் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது என்றும் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2977 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

254 views

பிற செய்திகள்

கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

109 views

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? - மத்திய கல்வி அமைச்சரிடம் மறுமொழி கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

93 views

"கொரோனா முகாமில் அடிப்படை வசதி இல்லை" - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளி

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சுமார் 152 பேர் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

264 views

சென்னையில் மாயமான 118 சவரன் நகை : பெங்களூருவில் நகையுடன் சிக்கிய கடை ஊழியர்

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடப்பட்ட 118 சவரன் தங்க நகைகள் பெங்களூர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளன.

415 views

தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் - 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

தேனியில், கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

27 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - சம்பவ இடத்தில் 3 பேர் பலி

திருப்பூர் பெள்ளிகாளிபாளையம் பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

1490 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.