அரசு இல்லத்தை காலி செய்தார் பிரியங்கா காந்தி
பதிவு : ஜூலை 30, 2020, 10:46 PM
டெல்லி அரசு இல்லத்தில் குடியிருந்து வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 23 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டைக் காலி செய்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இதனையடுத்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில் எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், அதனால்  டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள  அரசு இல்லத்தை  பிரியங்கா காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது, ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் பிரிங்கா காந்தி தற்போது வீட்டை விட்டு வெளியேறினார், பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில்,  23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் அவர்  தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு பாஜக எம்.பி.யும் ஊடகப்பிரிவுத் தலைவருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1174 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

451 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

434 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

125 views

பிற செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள தனது கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடினார்.

5 views

வரி செலுத்தி வருபவர்களைக் கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

முறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

277 views

கொரோனா தொற்று - முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

255 views

பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

18 views

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.

51 views

கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7 நாட்களாக வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.