அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி - மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பதிவு : ஜூலை 30, 2020, 07:42 PM
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டியதால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டியதால் பரபரப்பு நிலவியது. அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டி, குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவற்றை அப்புறப்படுத்தினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அண்ணா சிலை அவமதிப்பு - துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கண்டனம்


கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை அவமதிப்பு செய்ததற்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பொதுவாழ்வில் ஈடுபட்ட தலைவர்களையும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களையும்  அவமதிக்கும் வகையில், சிலைகளை களங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என ஒ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். 

அண்ணாசிலை மீது காவி கொடி கட்டிய விவகாரம் : குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்


கன்னியாகுமரி, குழித்துறையில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமது முகநூல் பக்கத்தில், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுவதாக புகார் கூறியுள்ளார்.  தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே அவர்களது எண்ணம் போவதாக,  ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அண்ணா சிலை அவமதிப்பு - வைகோ கண்டனம்


அண்ணா சிலைக்கு காவி துணி கட்டிய சம்பவம், தமிழ் அன்னையை, களங்கப்படுத்தியது போலாகும் என மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய செயல் மூலம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில சக்திகள் முனைப்பாக உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2976 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

பிற செய்திகள்

கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

98 views

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? - மத்திய கல்வி அமைச்சரிடம் மறுமொழி கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

85 views

"கொரோனா முகாமில் அடிப்படை வசதி இல்லை" - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளி

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சுமார் 152 பேர் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

245 views

சென்னையில் மாயமான 118 சவரன் நகை : பெங்களூருவில் நகையுடன் சிக்கிய கடை ஊழியர்

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடப்பட்ட 118 சவரன் தங்க நகைகள் பெங்களூர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளன.

399 views

தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் - 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

தேனியில், கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

26 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - சம்பவ இடத்தில் 3 பேர் பலி

திருப்பூர் பெள்ளிகாளிபாளையம் பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

1470 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.