தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு : பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் - தடை நீட்டிப்பு
பதிவு : ஜூலை 30, 2020, 04:35 PM
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல், ரிசார்ட், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, பயிற்சி நிறுவனம், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணைய வழி மூலம் கல்வி நிறுவனங்கள் கல்வி கற்பிப்பதை தொடர வேண்டும் என்றும் அதனை ஊக்குவிக்கவும், அரசு அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் என்றும், மெட்ரோ - மின்சார ரயில் இயக்க தடை விதிக்கப்படும் என்றும், (gfx in 8 ) திரையரங்கு, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், கேளிக்கைக் கூடங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுக்கூடம், பெரிய அரங்கு, கூட்டஅரங்கு, கடற்கரை, சுற்றுலாத் தலம், உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம் இயங்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் இடையேயான, பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள இடங்களில்,  தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

391 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

157 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

12 views

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.

11 views

கொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்

18 views

தமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது

14 views

தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்

தமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

9 views

தந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.